Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தொடர் விடுமுறை: ட்ரிபிள் மடங்காக உயர்ந்த விமான கட்டணம்

தொடர் விடுமுறை: ட்ரிபிள் மடங்காக உயர்ந்த விமான கட்டணம்

சனி, ஞாயிறு வார விடுமுறையுடன், ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் விடுமுறை கிடைப்பதால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்சிக்கு வருவதற்கான விமானங்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து திருச்சிக்கு வருவதற்கான விமானக் கட்டணம் ரூ.11,066-ல் இருந்து ரூ.36,985-ஆக அதிகரித்துள்ளது. இது 234 சதவீத உயர்வாகும்.


சனி, ஞாயிறு வார விடுமுறையுடன், ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் விடுமுறை கிடைப்பதால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இதனால், வரும் 17-ம் தேதி திருச்சிக்கு வரும் விமானங்களில் பயணிகள் தேவை அதிகரித்து, கட்டணமும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு வருவதற்கான விமானக் கட்டணம் ரூ.5,717-ல் இருந்து ரூ.9,818-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 71.7 சதவீதம் கட்டணம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு – திருச்சி வழித்தடத்தில் ரூ.4,823-ஆக இருந்த கட்டணம் ரூ.9,494 ஆகவும் ஹைதராபாத் – திருச்சி வழித்தடத்தில் ரூ.8,467 ஆக இருந்த கட்டணம் ரூ.11,103 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லி – திருச்சி வழித்தடத்தில் மட்டும் கட்டணம் ரூ.25,919 அதிகரித்து, ரூ.36,985-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய கட்டணத்துடன் ஒப்பிடுகையில், இது 234.2 சதவீத உயர்வாகும்.
கடைசி நேரத்தில் முன்பதிவு செய்வோர் அதிக செலவைச் சந்திக்க நேரிடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே கட்டணங்களை ஒப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Judge blocks Trump’s White House press ban on CNN, MS NOW, Politico
அடுத்த செய்தி
Massive oil, gas, mineral exploration to begin in Greenland, says Trump

தொடர்புடைய செய்திகள்